விழிப்புணர்வு - உம்முஃபவாஸ், கோட்டார்

தொகுத்து வழங்கியவர்: மருத்துவர் மு.சாதிக்

ஏண்டா தம்பி

எய்ட்சாமே.....

எப்படி வரலாம் இங்கு?

இந்தியாவில் தான்

அதிக பாதிப்பாம்

இதயமே நடுங்குது கேட்டு

இந்த நூற்றாண்டில் - நீ

மனிதனாய் மண்ணில் வந்தது

எந்த தர்மத்தின் புண்ணியமோ?

விஞ்ஞானத்தை கையிலடக்கி

வானத்திலும் சாதித்தோம்..

மனதை அடக்க ஆற்றலின்றி

மானத்தை அடகு வைத்து

மரணத்தை வாங்கலாமா..

மாற்றுறுப்பு கொடுத்தேனும்

மனித உயிரை மீட்கும்

மருத்துவ உலகம் - கேவலம்

மாற்றாத ஊசிகளால்

உயிர் பலி கொள்ளலாமா?

சோதிக்காமல் கொடுக்கும் இரத்தத்தால்

சாவூருக்கே ஓலை கொடுப்பதா?

மாதவியிடம் சென்ற கோவலனால்

காவியம் படைத்தாள் கண்ணகி

விலைமாதரிடம் சென்ற கணவனால்

எய்ட்சே மனைவிக்கு பரிசா?

கருவிலிருக்கும் சிசுவுக்கும்

கல்லறைதான் கட்டாயமா?

புதிய தலைமுறையே - நீ

பொறுமை காத்திடு

ஒழுக்கம் பேணிடு

ஒருவனுக்கு ஒருத்தி என்று

வாழ்ந்து காட்டிடு

குடும்பம் காக்க வந்தவனே

அதன் வேரை அறுக்க துணியாதே

நாட்டை காக்கும் நன்மகனே

நச்சை விதைக்க முயலாதே..

விலைமதிப்பற்ற மானிடத்தை

வீணில் மண்ணில் புதைக்காதே

எய்ட்சை ஒழிக்க சபதமெடு..

புதிய உலகம் படைக்க பாதையிடு

அறியாமல் சிக்கிய தோழருக்கு

அபயக்கரங்களை நீட்டிவிடு.
 

SAFA ACUPUNCTURE CLINIC - NAGERCOIL - 9443389935, 8903333300.

Copyright 2006-2015 darulsafa.com 

All Rights Reserved.