அறிவுக்கு சில துளிகள்

மு.சாதிக்.

  • எளியவர் என்று எவரையும் இகழாதே; தகுதியற்றவர்களிடம் எதையும் வாங்காதே. தவறு கண்டு ஏழைமக்களை சீறாதே.

  • வறுமை வந்தபோது துன்பத்தையும் கஷ்டத்தையும் உடனிருந்து அனுபவிப்பவர், உண்மை உறவுள்ளம் கொண்டவர்.

  • பொருத்தமானதாக இருந்தால் குழந்தையின் கூற்றாக இருந்தாலும் அதை அறிவாளிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

  • தனது உள்ளத்தில் மனிதன் காட்டும் மாளிகைக்குத் தூய்மை, நல்லறிவு, இரக்கம், அன்பு ஆகியவை நான்கு சுவர்கள்.

  • இளமையில் கருவுற்று, முதிர்ச்சி அடைந்ததும் செயலுருவாக்கம் பெற்ற சிந்தனையே அழகிய வாழ்க்கை.

  • நாம் வாழவேண்டும் என்பது மிக்கியமல்ல; வாழ்க்கைக்கு அப்பால் நம்பெயர் பொறிக்கப் படவேண்டும், அது முக்கியம்.

  • செயல்படுவோம்; நலனே நடக்கும் என்ற பொது நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.

  • இல்வாழ்க்கையை ஒருவன் நல்வாழ்க்கையாக நடத்தினால் போதும்; துறவறத்தால் ஒருவனுக்கும் நன்மையில்லை.

  • உன்னிலும் மேன்மையனவர்களை கவனித்து அவர்களிடம் உள்ள ஆற்றலையும், பண்பையும், படிப்பையும் பெறவழி செய்.

  • நன்றாக கட்டப்பட்ட வீட்டில் மழைநீர் நுழைவதில்லை. நற்சிந்தனை படைத்தவன் உள்ளத்தில் ஆசை நுழைவதில்லை.

  • எரிகிற நெருப்பை நீரினால் அணைப்பதைப் போல மனதில் எழுகின்ற கோபத்தைப் புத்தியினால் அடக்கணும்.

  • தண்டிப்பதற்கு ஆற்றல் இருந்தபோதும் இம்சை செய்யாமல் இருப்பது சிறப்பானதாகும்.அந்த செயலே மன்னித்தல்.

  • மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் நாம் இறைவனுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும்.

  • நாம் கற்ற கல்வி பூரணத்துவம் அடைய, பள்ளி படிப்புடன் வாழ்க்கைப் பள்ளியிலும் பல கருத்துக்கள் தெரிந்துகொள்.

  •  கைக்கு அழகு நன்கொடை, முகத்திற்கு அழகு உண்மையான சொல்.

  • நல்லவன் நட்பை பொருள் கொடுத்தாவது கொள்ளுக; தீயவர் நட்பை பொருள் கொடுத்தாவது தள்ளுக.

  • பணம் நம்மை ஆட்டி வைக்காமல், நாம் பணத்தை ஆட்டி வைப்பதுபோல நன்மை தருவது ஏதுவுமில்லை.

  • கல்லைவீசி எறிகிறவர்களுக்கும், தீமை செய்தவர்களுக்கும் மரம் பழம் தருவதுபோல் மேலோர் நன்மை செய்வார்.

  • தந்தை பத்துக் குழந்தைகளை காப்பாற்றுகிறார்; பத்து குழந்தைகள் ஒரு குழந்தையை காப்பாற்றுவதில்லை.

  •  வாழ்க்கையில் தன்னுடைய சுயபுத்தியில் நம்பிக்கை இல்லையென்றால் எதிர்காலம் இருக்கமுடியாது.

  • நல்லவரோடு நட்பு கொண்டிரு. அப்படி இருப்பதன் மூலம் நீயும் அவர்களில் ஒருவனாகி ஆகிவிடுவாய்.

  • பிறர்க்கு கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமை படுகின்றவனுடைய சுற்றம், உணவும், உடையும் கெடும்.

  • உண்மை தத்துவம் என்பது விதைகள்; ஆர்வமென்பது மழைநீர்; அடக்கமென்பது கலப்பை ஆகும்.

  • வாலிபத்தின் வளமையும், புத்துணர்ச்சியும் மிக்க இயமைக்காலம் உழைப்பதற்கு உகந்த காலமாகும்.

  •                                                        

  •                                 

Refer this page to your friends / relatives