அறிவுக்கு சில துளிகள்

மு.சாதிக்.

  • பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்கு பணத்தை குவிக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்

  • அன்பும் மரியாதையும் கொண்டு இருப்பவன் இந்த உலகத்தில் எதையும் சாதித்து விடுவான்.

  • ஒருவனின் செல்வம் வளர வழி, அவன் பிறர் பொருளை கவர விரும்பாததுதான்.

  • உன்பேச்சு உன்புத்திக் கூர்மையை பிரதிபலிக்கும். உன் வார்த்தை உன் அறிவுத்திறனை எடுத்துக்காட்டும்.

  • உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாதவன் உள்ளத்தை சுத்தமாக்க முடியாது.

  • எலும்பில்லா உடம்போடு வெயிலில் வாட்டும் புழுவைப் போல், அன்பில்லா உயிரை அறம் வாட்டும்.

  • ஒருவன் மற்றொருவனுக்கு செய்யக்கூடிய த்ருமங்களில் எல்லாம் தலைசிறந்தது அறிவு தானமே!

  • நாம் பெற்றிருக்கும் பொருட்செல்வம் சிறிதளவேயாயினும் அதனைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

  • பெண்களை தெய்வீகமாகத் தோற்றம் செய்வது அடக்கம்; பெண்களை மிகவும் பாராட்டும்படி செய்வது பணிவு.

  • மன அமைதி, ஆனந்தம் இவை அன்பு, தவம், தியாகம் முதலியவற்றால் அன்றிப் பணத்தால் கிட்டாது.

  • நீ மேன்மையடைய வேண்டுமானால் உன் தாய் தந்தை சொல்கேட்டு நடப்பதுடன் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

  • உன்னால் எதை செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ, அதை செய்து காட்டுவதுதான் இன்பம்.

  • அழகியாக இருப்பதைவிட நல்லவளாக் இருப்பதையே ஒவ்வொருப் பெண்ணும் விரும்புகிறாள்.

  • முள் குத்தும் காலுக்கு செருப்பு இல்லை என வருந்துபவன் பாமரன், தூங்க பஞ்சணை இல்லை என்பவன் சுகவாசி.

  • அனுபவமென்று பாடம் கற்கும்பொழுது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கல்வி முறையாகும்.

  • கைமாறு கருதாமல் பிறரது துன்பத்தை நாமே மேற்கொண்டால், நம் அழுகை விண்ணுலகை எட்டும்.

  • இரக்கம் இல்லாதவர், பிறர் துன்பத்தைக் கண்டு கலங்காதவர், எளிய வாழ்க்கையை விரும்பாதவர் -இவர்களை நம்பாதே.

  • வாழ்வில் அடக்கம், பொறுமை, சத்தியம், அன்பு, தர்மம், இறைபக்தி, பணிவு -இவைகளைக் கடைபிடிக்க வேண்டும்.                                                          

  •                                 

Refer this page to your friends / relatives