|
நோன்பின் மாண்பு

- புனித மிகு ரமலானில் புண்ணியத்தை தேடுங்கள்.
- கண்ணியமாய் நோன்பிருந்து கடமையை நிறைவேற்றுங்கள்.
- இறையச்ச உணர்வோடு இரவு பகல் தொழுதிடுங்கள்.
- திருமறையைப் பொருளுணர்ந்து திருத்தமுடன் படித்திடுங்கள்.
- சுன்னத்து நஃபிலான வணக்கங்களை வணங்கிடுங்கள்.
- அருள்மறையை படித்துணர்ந்து அதன்படி செயலாற்றுங்கள்.
- கடமையான ஜக்காத்தை கவனமாக வழங்கிடுங்கள்.
- தான தர்மங்களை தாராளம் கொடுத்திடுங்கள்.
- ஆடம்பர வீண்விரயச் செலவுகளை தவிர்த்திடுங்கள்.
- fபித்ரு சதகாக்களை பிரியமுடன் வழங்கிடுங்கள்.
- அவதூறு, புறம்பேசல் அடியோடு அகற்றிடுங்கள்.
- தற்பெருமை, ஆணவத்தை, அகந்தையினை அழித்திடுங்கள்.
- சின்னத்திரை நிகழ்ச்சிகளை
சுத்தமாய் மறந்திடுங்கள்.
- தினந்தோறும் இறைவனிடம் பிழைப்பொறுப்பை தேடுங்கள்.
- திக்று, தஸ்பீஹ்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
- அண்ணலார் நபிமீது அதிக சலவாத்து சொல்லுங்கள்.
- பொன்னான நேரங்களை புண்ணியமாய் செலவிடுங்கள்.
- நல்லொழுக்க நற்பண்பு உடையோராய்
வாழ்த்திடுங்கள்.
- அல்லாஹ், ரசூல் காட்டிய நெறிமுறையில்
வாழ்ந்திடுங்கள்.
- மறுமையின் வெற்றிக்கு வழிமுறையை தேடுங்கள்.
|