இளங்கடை, கோட்டார், நாகர்கோவில்-2

கைபேசி: 94433 89935; 89033 33300

ATAMA ACUPUNCTURE ACADEMY ADMISSION GOING ON -- CONTACT FOR APPLICATION : 8903333300 - WEEKLY ONE DAY CLASS (SATURDAY) - DIPLOMA & MASTER DIPLOMA IN ACUPUNCTURE, MD ACUPUNCTURE FOR DAT.,M.ACU., STUDENTS.

கருப்பட்டியின் பயன்கள்

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து 
உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவதுடன், 
கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு 
பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் 
வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. 
காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் 
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்
கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் 
எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் 
கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், 
அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.
-
================================================
சித்த மருத்துவர். சொக்கலிங்கம், காரைக்குடி
நன்றி: பசுமை விகடன்

Refer this page to your friends / relatives