" ஸஃபா அக்குபங்சர் சிகிட்சை மையம் "

சிகிட்சையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள

  • அக்குபங்சர் சிகிட்சையின்போது உங்களது அலைபேசிகளை அணைத்து வைக்கவும். எக்காரணம் கொண்டும் அந்நேரம் அலைபேசியில் பேசக்கூடாது. அதன் ரேடியேஷன் சிகிட்சையை பாதிக்கும்.
  • சிகிட்சையின்போது நேராக இரு கை, கால்களையும் நீட்டி, கண்களை மூடிக்கொண்டு நன்றாக மூச்சை இழுத்துவிடவும். அக்குபங்சர் ஊசி போட்டு எடுக்குவரை இது தொடரவேண்டும்.
  • தயவுசெய்து உங்களுடன் இருப்பவருடன் சிகிட்சை முடியும்வரை பேசக்கூடாது. மருத்துவர் கேட்கும் கேள்விக்குமட்டும் ப்திலளித்து விட்டு அமைதியாக படுத்துக் கொள்ளவும்.
  • அக்குபங்சர் சிகிட்சை எடுக்குமுன் உங்களது உள் ஆடைகளை தளர்த்திவிட்டு படுக்கவும்.
  • ஆபரணங்களை வீட்டில் களற்றி வைத்துவிட்டு வரவும். இது சிகிட்சைக்கு இடையூறு தரும் வாய்ப்புள்ளது.
  • அக்குபங்சர் சிகிட்சை முடிந்து ஒரு மணிநேரத்திற்கு உடலில் ஊசிபோட்ட அக்குபங்சர் புள்ளிகளில் தண்ணீர் படக்கூடாது.
  • அக்குபங்சர் சிகிட்சை எடுக்கும் நேரம் எந்த உணவோ, நீரோ அருந்தக்கூடாது.
  • உணவு உட்கொண்டு அல்லது குளித்துவிட்டு ஒருமணி நேரம் கழிந்த பின்புதான் சிகிட்சை எடுக்கவேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலம் அல்லது கர்ப்பமாக இருப்பின் முன்கூட்டியே மருத்துவரிடம் கூறிவிடவும்.
  • அறுவை சிகிட்சை ஏதாவது செய்திருப்பின் மருத்துவரிடம் முன் கூட்டியே கூறிவிடவும்.
  • 2 கை, கால்களை சுத்தமாக கழுவிவிட்டு சிகிட்சைக்கு அமரவும்.
  • மருத்துவரின் சிகிட்சைக்கு முற்றிலும் ஒத்துழைக்க வேண்டும்.
  • நோயின் தன்மையைப் பொறுத்து சிகிட்சையின் நேரம் வேறுபடலாம். பொதுவாக 20 நிமிடங்கள் சிகிட்சை நேரம்.
  • உணவு உண்டுவிட்டு 2மணிநேரம் கழிந்தபின்தான் அக்குபங்சர் சிகிட்சை எடுத்துக்கொள்ளவும். வெறும் வயிற்றில் சிகிட்சை எடுக்கக்கூடாது. அதுபோல் குளித்துவிட்டு 1மணி நேரம் கழிந்தபின்தான் அக்குபங்சர் சிகிட்சை எடுத்துக்கொள்ள இயலும்.
  • மறுசிகிட்சைக்கு வருமுன் தொலைபேசிமூலம் முன்பதிவு செய்துவிட்டு வரவும். (உங்களுக்கு வழங்கப்பட்ட கார்டு பதிவு எண்ணையும் குறிப்பிடவும்).

அன்புடன்,

Dr.M.SATHICK, HHA., RNMP., LEM., ND., FRIM., DT., MD(Acu), Ph.D(Acu)

Contact for an Appointment: 94433 89935,  89033 33300

குறிப்புகடைபிடிக்க வேண்டிய உணவுமுறை > காலை & இரவு: 7-8; மதியம்: 1-2pm.

இயற்கையோடு இணைவோம்!                                                             இன்பமாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்!